தன் கண்ணுக்குள் வைத்து வளர்த்த மகனை காக்கமுடியவில்லையே என்று தாயோ கண்ணீரில்.....
தான் செய்த செயல் தன் இரத்ததிற்கே வினையானதே என்று தந்தையோ கவலையில்.....
தன் தமயன் மீண்டு வருவான் என்று அண்ணணோ ஏக்கத்தில்.....
எப்பேருபட்டாவது குழந்தையைக் காப்பாற்றுவர் என்று நாமோ நம்பிக்கையில்.....
இவையாவும் அறியாது,என்ன நடக்கிறது என்று தெரியாது, தான் எங்கே உள்ளோம் என்று புரியாது நம் சுர்ஜித்தோ ஆழ்த்துளைக் கிணற்றில்.....
ஆடி ஓடிய பிஞ்சு பாதங்களோ முடங்கியது சில அங்குல குழியில்.....
கொஞ்சிப் பேசும் மழலையின் மொழி மறைந்ததோ காரிருளில்.....
இப்பொழுது அவன் வாழக்கையோ கடவுளின் கையில்.....
ஆனால் அவனின் நிலையால் ஒன்று மட்டும் உன் மனதில் கொள்,
இறைவன் நம்மை இந்த நிலைகளுக்கு கொண்டு செல்லாமல் காப்பான் என்று
எண்ணாதே...நாம் செய்யும் சிறு பிழைகள் நம்மை பாதிக்காது என்றும் எண்ணம் கொள்ளாதே.....
ஏனெனில் சில நாட்களுக்கு முன் வரை ஒரு சிறிய போஸ்டர் ஓர் உயிரைக் கொல்லும் என்றும் தெரியாது,சில அங்குலம் கொண்ட ஓர் குழி பிஞ்சு உயிர்களை பறிக்கும் என்றும் தெரியாது.
செய்யும் பிழை சிறியதாகினும்,விளையும் வினை பெரியதே.....
என்றும் மனதில் கொள்வோம்.....
Nice👌 Abi
ReplyDelete